இரு எரிவாயு கப்பல்களுக்கு அனுமதி!

0

லிட்ரோ நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்டுள்ள சமையல் எரிவாயு தொகையில் இரண்டு கபபல்களிலுள்ள சமையல் எரிவாயுவை மாத்திரம் சந்தைக்கு விநியோகிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக எரிவாயு  சம்பந்தமான நடவடிக்கைகள் தொடர்பில் ஒருங்கிணைப்பு அதிகாரியான நியமிக்கப்பட்டுள்ள, தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் ஜயந்த த சில்வா தெரிவித்தாா்.

இந்த இரண்டு கப்பல்களிலுமுள்ள சமையல் எரிவாயு சரியான தரத்தில் இருப்பதாகவும், அவற்றின் பிரோபேன் மற்றும் பியுடேன் ஆகியவற்றின்  ஈத்தயில் ஆகிய இரசாயன பொருட்களின் உள்ளட்டக்கம் முறையாக உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டாா்.

மற்றைய கப்பலில் இருக்கும் எரிவாயுக்களில் பிரோபேன் மற்றும் பியுடேன் ஆகியவற்றின் உள்ளிட்ட இரசாயன பொருட்களின் அளவு தேவையான அளவில் இன்மையினால் அதனை தரையிறக்க அனுமதி வழங்க முடியாது என அவர் குறிப்பிட்டாா்.

ஜனாதிபதி ஊடக மையத்தினால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தாா்.

இந்த மூன்று எரிவாயு கப்பல்களிலும் இருக்கும் எரிவாயுவின் தரம் நூற்றுக்கு 30 சதவீதத்தை கடக்க வில்லை எனவும், எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்கும் நடவடிக்கை இடைநிறுத்தபடாது   என்றும் சுட்டிக்காட்டிய அவர் பாதுகாப்பான முறையில் எரிவாயு விநியோகிக்கப்படுமென்றும் அவர் குறிப்பிட்டாா்.