இலங்கையில் கட்டம் கட்டமாக தடையை அமுல்படுத்த தயாராகும் அரசாங்கம்

0

அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாதத்துடன் தொடர்புடைய அமைப்புகள் கட்டம் கட்டமாக நாட்டில் தடை செய்யப்படுவதுடன், சமூக வலைத்தளங்களில் போலியான செய்திகளை வெளியிடுபவர்களுக்க எதிராக தண்டனை வழங்கும் வகையில் விரைவில் தண்டனைச் சட்டக்கோவையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

தற்போதைய தண்டனை சட்டக் கோவையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

சமூக வலைத்தளங்களில் போலியான செய்திகள் வெளியிடப்படுவதால் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கு அவை பாரிய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாதத்திற்கு அடிகோலும் கருத்துகளும் வெளியிடப்படுகின்றன.

அவ்வாறான பிரச்சாரங்களை மேற்கொள்பவர்களுக்கு தண்டனையை பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே தண்டனைச் சட்டக்கோவையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.