இலங்கையில் மகப்பேற்று விடுமுறையில் அதிரடித் திருத்தம்

0

நாட்டில் பெண் ஊழியர்களுக்கு வழங்கப்படும் 84 நாள் மகப்பேற்று விடுமுறை நாட்கள் 42ஆக குறைக்கப்பட்டுள்ளதாக அபிவிருத்தி அலுவலர்கள் சேவைப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தப் பிரச்சினையை சுகாதார அமைச்சின் செயலாளரும் உலக சுகாதார அமைப்பின் இலங்கைப் பிரதிநிதியும் கடந்த புதன் கிழமை கொண்டுவந்தனர்.

82 நாள் விடுமுறையானது கடந்த 2013ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டதுடன் விடுமுறைக் காலத்தைப் பாதியாகக் குறைத்த அண்மைய செயற்பாடானது நியாயமற்றது என அபிவிருத்தி அலுவலர்கள் சேவைப் பிரிவின் சங்கம் தெரிவித்துள்ளது.