இலங்கையின் இரத்தினபுரி பகுதியிலிருந்து மற்றுமொரு நீலக்கல் கொத்தணி மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இரத்தினபுரி, இறக்குவானை பிரதேசத்திலிருந்தே 80 கிலோகிராம் நிறையுடைய குறித்த நீலக்கல் கொத்தணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த நீலக்கல் கொத்தணி இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகாரசபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதன்பெறுமதி சுமார் 50 மில்லியன் அமெரிக்க டொலராக இருக்கும் என அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இதனை சீனாவில் எதிர்வரும் நவம்பரில் இடம்பெறவுள்ள ஏலத்தில் விற்பனை செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, இரத்தினபுரி, கஹவத்த பிரதேசத்தில் உலகிலேயே மிகப்பெரிய நீலக்கல் கொத்தணியொன்று அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.