இந்திய அணிக்கு எதிரான இருபதுக்கு இருபது தொடரை வென்ற இலங்கை அணிக்கு 100,000 அமெரிக்க டொலரை சன்மானமாக வழங்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடர் நிறைவடைந்தது. இதில் 2 – 1 என்ற அடிப்படையில் இலங்கை அணி தொடரைக்கைப்பற்றியது.
தொடரை கைப்பற்றிய இலங்கை அணிக்கு ஜனாதிபதி வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே, இலங்கை அணிக்கு 100,000 அமெரிக்க டொலரை சன்மானமாக வழங்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.