இளைஞனை கொடூரமாக தாக்கும் பொலிஸ் அதிகாரி – காணொளி வெளியானது!

0

பொலிஸ் அதிகாரி ஒருவர் வீதியில் இளைஞன் ஒருவரை கொடூரமாக தாக்கும் காணொளி வெளியாகி பெரும் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

மஹரகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவரே இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிபொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

விபத்து சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதுஎவ்வாறு இருப்பினும் விபத்துடன் தொடர்புடைய இளைஞன் மீது இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டமை தவறான விடயம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், குறித்த பொலிஸ் அதிகாரி தற்போது பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிபொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.