ஊரடங்கு சட்டம் தொடர்பாக பொது மக்களுக்கு கடுமையான உத்தரவு!

0

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தினை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

முப்படையினரும் போலீசாரும் இணைந்து குறித்த சட்டத்தினை நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் பொது மக்கள் வெளியில் வர வேண்டாம் எனவும், மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வீடுகளுக்கே விநியோகிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் கடுமையான சுகாதார நெருக்கடி காரணமாக குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.