எதிர்வரும் வாரங்களில் நோய் பரவல் குறைவடைய வாய்ப்பு!!

0

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைவதனால் எதிர்வரும் வாரங்களில் நோய் பரவல் குறைவடைய வாய்ப்புள்ளதாக தொற்று நோயியல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்து கருத்து தெரிவித்த தொற்றுநோயியல் பிரிவின் சிறப்பு மருத்துவர் சமன் ஹேவகே, கண்காணிப்பு நடவடிக்கைகள் பலவீனமடைந்தால் மீண்டும் வைரஸ் தாக்கம் அதிகரித்துவும் என எச்சரித்துள்ளார்.

தற்போது சுகாதார அதிகாரிகள் மேற்கொண்டுள்ள அனைத்து நடவடிக்கைகளும் வெற்றியளித்துள்ளது என கூறிய அவர், நாட்டில் கொரோனா வைரஸ் நோய் பரவலின் விகிதம் குறைந்துள்ளதாக சுகாதார ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்றும் குறிப்பிட்டார்.

எனவே இதன் காரணமாக தமது நடவடிக்கைகளில் தளர்வு ஏற்பட்டால் மீண்டும் அதிகரித்துவிடும் என்பதனால் அதற்கு இடமளிக்காமல் கடுமையாக சுகாதார நடவடிக்கைகளை கடைப்பிடித்து வருவதாக கூறியுள்ளார்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் பல நடவடிக்கைகள் தொடர்வதாகவும் இந்த நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டால் அடுத்த வாரமளவில் நோய் பரவல் குறைந்துள்ளதா என்பதை அறிந்துகொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.