எரிபொருள் பிரச்சினையால் கொள்கலன்கள் ஏற்றுமதி – இறக்குமதி பணிகளுக்குப் பாதிப்பு!

0

எரிபொருள் பிரச்சினை காரணமாக, ஏற்றுமதி – இறக்குமதி கொள்கலன்களை, மேல் மாகாணத்திற்கு வெளியே கொண்டுசெல்லும் பணிகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய இலங்கை கொள்கலன் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் இன்மையால், தற்போது 75 சதவீதமான ஏற்றுமதி – இறக்குமதி கொள்கலன் தாங்கி ஊர்திகள் சேவையிலிருந்து விலகியுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள தெரிவித்துள்ளார்.

6,000 ஏற்றுமதி – இறக்குமதி கொள்கலன் தாங்கி ஊர்திகளில், நாளாந்தம் சுமார் ஆயிரம் ஊர்திகள், துறைமுகங்களை நோக்கிப் பயணிக்கின்றன.

அத்துடன், துறைமுகத்துக்கு வெளியே 2,000 ஊர்திகள் பயணிக்கின்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.