எரிவாயு சிலிண்டரின் விலையை 400 ரூபாயில் அதிகரிக்க நுகர்வோர் விவகார ஆணையத்தினால், அமைச்சின் துணைக்குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர்களான பந்துல குணவர்தன, கெஹேலிய ரம்புக்வெல்ல, வாசுதேவ நாணயக்கார, மஹிந்த அமரவீர மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அடங்கிய துணைக்குழுவினால் இது தொடர்பில் நீண்ட காலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
லிற்ரோ கேஸ் நிறுவனம், தங்கள் எரிவாயு சிலிண்டர் ஒன்றை 600 ரூபாயிலும், லாப்ஸ் கேஸ் நிறுவனம், தங்கள் எரிவாயு சிலிண்டர் ஒன்றை 700 ரூபாயிலும் அதிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
எப்படியிருப்பினும் மக்கள் பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் எரிவாயு விலையை அதிகரிக்க முடியாதென அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
இதனால் மாற்று முறை ஒன்றை அறிமுகப்படுத்தி வைக்குமாறு அமைச்சின் துணைக்குழுவினால் நுகர்வோர் விவகார ஆணையம் மற்றும் நிறுவனங்களிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.