கடந்த ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உட்பட பலர் சி.ஐ.டி.யினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பாப நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் இளைய சகோதரரான ரியாத் பதியூதீன் புத்தளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து இடம்பெற்ற நடவடிக்கையில் உயர் நீதிமன்ற சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உட்பட பலர் சி.ஐ.டி.யினரால் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.