ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்கிய அரசியல் கட்சிகள் உள்ளிட்ட மேலும் சில கட்சிகள் தம்முடன் இணைந்துகொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
இலங்கை மக்கள் தேசிய கட்சி, தமிழ் ஐக்கிய சுதந்திர முன்னணி, முற்போக்கு மக்கள் சேவையாளர் கட்சி, ஶ்ரீ டெலோ, ஜனநாயக மக்கள் காங்கிரஸ், ஐக்கிய காங்கிரஸ் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம், ஐக்கிய இலங்கை முன்னணி, இலங்கை ஐக்கிய சமாதான கட்சி ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித்த ரங்கே பண்டாரவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்த சந்திப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் நடைபெற்றுள்ளது.
நாட்டிற்கு பயனுள்ள அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு பூரண ஒத்துழைப்பை வழங்க குறித்த கட்சிகள் இணக்கம் தெரிவித்தாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.