ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு அஞ்சமாட்டோம்!

0

” ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு நாம் அஞ்சவில்லை. இலங்கையில் இனப்படுகொலை நடக்கவும் இல்லை.” – என்று ” – என்று இறுதிக்கட்டப்போரை வழிநடத்திய இராணுவத்தளபதியான பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகா எம்.பி. தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

” புலிகள்தான் இந்திய பிரதமர் ரஜீவ் காந்தியைக் கொன்றனர். தமிழ்த் தலைவர்களை கொன்றனர். வணக்கஸ்தலங்கள்மீது தாக்குதல் நடத்தினர் என சுட்டிக்காட்டிய பொன்சேகா, இராணுவத்தின் நடத்தையில் தவறில்லை என்பதாலேயே 2010 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட இராணுவத் தளபதிக்கு வடக்கு, கிழக்கு மக்கள் ஆணை வழங்கினார்கள் எனவும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

” போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்கள் போர் செய்தவர்கள் அல்லர். போர் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருந்தவர்களே போர்க்குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

எனவே அவர்கள் காரணமாக நீதிக்கு முன் கொண்டு வரப்படவேண்டும். குற்றம் புரிந்தவர் இருந்தால், அவர் தேசிய மட்டத்தில் தண்டிக்கப்படவேண்டும். அவர் இராணுவ நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவேண்டும்.

இதன் மூலம் சர்வதேச நியதிகளின் அடிப்படையில் போர் புரிந்த படையினரின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விலக்கிக்கொள்ளமுடியும் என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

படையினர் தமிழ் மக்களுக்கு எதிராக போர் புரிந்தனர் என்று ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் முறையிட்டவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களாவர் என்பதை மனித உரிமைகள் ஆணையாளர் புரிந்துகொள்ள வெண்டும்.” – என்றார் பொன்சேகா.