கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு வெளியிடுவதில் தாமதம் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.
பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
பெறுபேறுகள் 28 ஆம் திகதி வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், அரசாங்கம் அறிவித்துள்ள விசேட விடுமுறை காரணமாக பெறுபேறுகளை வெளியிடுவதில் கால தாமதம் ஏற்படக்கூடும் என பரீட்சைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.