களுதாவளையில் ஒருவருக்கு கொரோனா தொற்று

0

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி சுகாதாரப் பிரிவிற்குட்பட்ட, களுதாவளை 4 ஆம் பிரிவைச் சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிற்கு மேசன் வேலைக்காக சென்று வருகை தந்திருந்த நிலையில், களுதாவளையில் அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

குறித்த நபருக்கு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது அதற்குரிய பெறுபேறு சனிக்கிழமை மாலை வெளிவந்துள்ளபோது குறித்த நபர் கொரோனா தொற்றுக்குள்ளாகியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பட்டிருப்புத் தொகுதியில் அமைந்துள்ள மண்முனை தென் மேற்கு மற்றும், போரதீவுப் பற்று பிரதேசங்களைச் சேர்ந்த தலா ஒவ்வொருவர் கொரோனாத் தொற்றுக்கு உட்பட்டு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

எனினும் போரதீவுப் பற்றுப் பிரதேசத்தின் பெரியபோரதீவு, பட்டாபுரம், மற்றும், மண்முனை தென் மேற்கு பிரதேசத்தின் மாவடிமுன்மாரி ஆகிய பகுதிகளில் சுகாதாரத்துறையினர், பொலிசார், மற்றும் இராணுவத்தினர், இணைந்து சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளதையும் அதவானிக்க முடிகின்றது.