கிளிநொச்சிக்கு வருகைதரும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் தொற்று நீக்கிய பின்னர் அனுமதிக்கப்படுகின்றனர்.
இன்று காலை முதல் முறிகண்டி பகுதியில் அமைந்துள்ள சோதனைச்சாவடியில் குறித்த செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
நிறைவாழ்வு சிறுவர் கழகத்தின் ஏற்பாட்டில் குறித்த செயற்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, பிற பிரதேசங்களிலிலிருந்து கிளிநொச்சி மாவட்டத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் சுத்திகரிப்பின் பின்னர் அனுமதிக்கப்பட்டது.
குறித்த செயற்திட்டம் நாளை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் போதும் கிளிநொச்சி நகரில் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.