கிளிநொச்சியில் ஊரடங்கு சட்டத்தை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் தேவையற்ற நடமாட்டத்தில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது மோட்டார் சைக்கிள் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நேற்று முதல் கைது செய்யப்படுபவர்களுக்கு பொலிஸ் பிணை வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.