குவைத்திலிருந்து வந்தவர்களிற்கு உதவிய இராணுவ வீரருக்கு கொரோனா

0

குவைத்திலிருந்து அழைத்துவரப்பட்டவர்களிற்கு உதவும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவவீரர் ஒருவர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க விமானநிலையத்தில் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவவீரரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.