வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள கைதிகளை பார்வையிட வழங்கப்பட்ட அனுமதி தற்காலிகமாக நிறுத்தபட்டுள்ளது.
மறு அறிவித்தல்வரை சிறைக்கைதிகளை பார்வையிட அனுமதி வழங்கப்படாது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதியொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இனங்காணப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அங்கிருந்த 177 பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.