கொரோனாவிற்கான மருந்து தயார் – உலக மக்களுக்கு நம்பிக்கை தரும் தகவல் வெளியானது!

0

கொரோனா வைரஸ் ஒழிப்புக்காக தயாரிக்கப்பட்ட மருந்து 95 வீதம் வெற்றியளித்துள்ளது.

அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் மொடர்னா நிறுவனம் இதுகுறித்த அறித்தலினை வெளியிட்டுள்ளது.

இந்த மருந்திற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ள எதிர்வரும் ஓரிரு வாரங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பெல்ஜியத்திற்கு சொந்தமான நிறுவனமொன்றும் கொரோனா தொற்று ஒழிப்புக்கான மருந்தொன்றை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.

சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டு வரும் நிலையில் குறித்த அறிவிப்புகள் மக்களுக்கு சற்று ஆறுதல் தரும் செய்தியாக மாறியுள்ளது.