கொரோனா நோயாளர்கள் 20 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 142 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகிய 16 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், தொற்றுக்குள்ளான 104 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வைத்திய கண்காணிப்பின் கீழ் 173 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில் 29 சிறுவர்களும் அடங்குவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா தொற்றினால் இருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.