கொரோனா மரணங்கள் குறித்து பொய் பிரசாரங்கள் மேற்கொள்ள வேண்டாம் – சுகாதார அமைச்சு

0

கொரோனா மரணங்கள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பொய் பிரசாரங்கள் மேற்கொள்வதை தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள சுகாதார அமைச்சு இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.

கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் இறுதிக் கிரியைகள் மேற்கொள்ளப்படும் விதம் தொடர்பாக அரசியல்வாதிகள் மற்றும் சில இணையத்தளங்கள் போலி பிரசாரங்களை மேற்கொள்வதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சுக்கு கிடைத்துள்ள அறிக்கைகளின் பிரகாரம், கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் அனைவரின் சடலங்களும் தகனம் செய்யப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் அரசியல் இலாபத்திற்காக சுகாதார அமைச்சின் கொள்கைகளை திரிபுபடுத்தி போலி செய்திகளை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.