‘கொரோனா’ வைரஸ் தாக்கிய மேலும் 4 பேர் வீடு திரும்பியுள்ளனர்!

0
கொரோனா (கொவிட் 19) வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் அங்கொடை IDH  வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 4 பேர் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரை 6 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதா அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வித கொரோனா நோயாளர்களும் நேற்று (25) பதிவாகாத நிலையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 102 ஆக பதிவாகி உள்ளது.

அவர்களில் 6 பேர் தற்போது நிலையில் முழுவதுமாக குணமடைந்து வெளியேறி உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

வைரஸ் தொற்றுக்குள்ளான காரணத்தால் ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மற்றுமொரு நபர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி தற்போது நிலையில் மூன்று பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும் நாடு பூராகவும் உள்ள வைத்தியசாலைகளில் 255 பேர் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.