இலங்கையில், மேலும் 4 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.
அதன்படி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 203 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை, இன்று மேலும் ஒருவர் குணமடைந்ததாகவும் அதன்படி தொற்றுக்குள்ளான 203பேரில் இதுவரை 55 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.