கோழி இறைச்சி, முட்டையின் விலைகள் அதிகரிப்பு?

0

கோழி உணவுக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாக கோழி முட்டையின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, அகில இலங்கை கோழி வர்த்தகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

சோளம் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கும் வர்த்தகர்களை கைது செய்வதற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை மேற்கொள்வதில்லை என சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

கோழி உணவிற்கு பயன்படுத்தும் சோளம் மறைத்து வைப்பதன் காரணமாக முட்டை விலை 25 ரூபாய் வவைர அதிகரிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

சோளத்திற்கு அரசாங்கத்தினால் 55 ரூபாய் என்ற நிர்ணய விலை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் இடையில் குறைந்த விலையில் விவசாயிகளிடம் சோளம் பெற்றுக் கொண்டு மறைத்து வைத்து, அதிக விலையில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை வர்த்தகர்கள் மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே கோழி முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கும் என அவர் சுட்டிக்காட்டியு்ளார்.

தற்போது 22 ரூபாவுக்கு விற்பனையாகும் முட்டை விலையை 25 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.