சட்டத்தின் ஆட்சிக்கும் நாட்டு மக்களின் நல்வாழ்விற்கும் பெரும் ஆபத்துள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், “ஊரடங்கு உத்தரவினை சரிசெய்யுமாறும் ஒழுங்குபடுத்துமாறும் இலங்கை அரசாங்கத்திற்கு இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு ஆலோசனை வழங்கவேண்டும்.
கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் இந்த தருணத்தில் எழுந்துள்ள சவால்களை எதிர்கொள்வதற்கு நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது அவசியமானது விரும்பத்தக்கது என்ற கருத்தை நான் கொண்டிருக்கின்றேன்.
எனினும், ஊரடங்கு சட்டம் பொருந்தக்கூடிய சட்டவிதிகளின்படி சட்டப்படி விதிக்கப்படவேண்டும்.
இதுவரை என்னால் உறுதிப்படுத்த முடிந்தளவிற்கு ஊரடங்கு சட்டம் எந்தவொரு சட்டவிதிகளையும் பின்பற்றி அமுல்படுத்தப்படவில்லை.
இவ்வாறான நடவடிக்கையால் சட்டத்தின் ஆட்சிக்கும் நாட்டு மக்களின் நல்வாழ்விற்கும் பெரும் ஆபத்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.