ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை நடத்தும் போது, சஹ்ரானின் வெளிநாட்டு தொடர்புகள் குறித்து விசாரணை நடத்த குற்றவியல் விசாரணை திணைக்களம் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என அரசாங்கத்திற்கு தெரியவந்துள்ளது.
இந்த விசாரணைக்கு குற்றவியல் விசாரணை திணைக்களம், சர்வதேச பொலிஸாரிடம் உதவி பெற்றுக்கொள்வதை நிராகரித்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் கூறுகின்றன.
அத்துடன் சிரியா, ஈராக் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் புலனாய்வு சேவைகளின் உதவிகளையும் குற்றவியல் விசாரணை திணைக்களத்தினர் பெறவில்லை.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் 47 வெளிநாட்டவர்கள் உயிரிழந்த நிலையில், குற்றவியல் விசாரணை திணைக்களத்தினர், வெளிநாட்டு புலனாய்வு சேவைகளின் உதவியை பெற்றுக்கொள்ளாமையானது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.