சஹ்ரான் ஹாஷிமுடன் தாம் தொடர்பைக் கொண்டிருக்கவில்லை! – அரச புலனாய்வு சேவை இயக்குநர்

0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமுடன் தாம் தொடர்பைக் கொண்டிருக்கவில்லை என்று அரச புலனாய்வு சேவை (எஸ்.ஐ.எஸ்) இயக்குநர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியது போல் மலேசியாவில் தான், சஹ்ரான் ஹாஷிமை சந்திக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார மீது குற்றவியல் புலனாய்வுத் துறையில், மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே முறைப்பாட்டை செய்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் நளின் பண்டார இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

இலங்கையில் 2019 உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்கு முன்னர் சஹ்ரான் ஹாசிம் மலேஷியா, இந்தோனேஷியா மற்றும் இந்தியாவிற்கு பயணம் செய்ய சுரேஸ் சல்லே வழியேற்படுத்திக் கொடுத்ததாக நளின் பண்டார குற்றம் சுமத்தியுள்ளார்.