சில வைத்தியசாலைகளில் இதயம், சிறுநீரகம், புற்று நோயாளர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு?

0

நாடளாவிய ரீதியிலுள்ள பல வைத்தியசாலைகளில் இதயம், சிறுநீரகம் மற்றும் புற்று நோயாளர்களுக்காகப் பயன்படுத்தப்படும் அதிகளவான மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரச மருந்தாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் அதிகளவான ஏனைய மருந்துகள் தீர்ந்துவிடும் எனவும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சத்திரசிகிச்சையை ஒத்திவைக்க எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என பேராதனை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அர்ஜுன திலகரத்ன தெரிவித்துள்ளார்.

மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் தட்டுப்பாடு காரணமாக பேராதனை வைத்தியசாலையில் திட்டமிடப்பட்ட சத்திரசிகிச்சை நேற்று காலை சில மணித்தியாலங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

எவ்வாறாயினும், சத்திரசிகிச்சைக்கு தேவையான மருந்துகள் மற்றும் உபகரணங்களை வழங்குவதாக மருத்துவ வழங்கல் பிரிவு தெரிவித்ததை அடுத்து, சத்திரசிகிச்சை வழமை போன்று ஆரம்பிக்கப்பட்டதாக பேராதனை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.