சீனாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டுவரப்படுகின்றன!

0

சீனாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளன.

குறித்த தடுப்பூசிகள் இன்று(புதன்கிழமை) இலங்கையினை வந்தடையும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தடுப்பூசிகள் இலங்கையிலுள்ள சீனர்களுக்கு முதலில் வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

சுமார் 4,500 இற்கும் மேற்பட்ட இலங்கையிலுள்ள சீனர்களுக்கு இவ்வாறு தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.

இதேவேளை, அவசரகால பயன்பாட்டிற்கு இலங்கையில் சீன தடுப்பூசிக்கு இதுவரையில் அனுமதி வழங்கப்படவில்லை என்பதுக் குறிப்பிடத்தக்கது.