சீனாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கப்போவதில்லை – வட கொரியா

0

சீனாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கப்போவதில்லை என வட கொரியா தெரிவித்துள்ளது.

பகைமை உணர்வு கொண்ட நாடுகளின் செயல்களாலும், கொரோனா தொற்று அபாயம் காரணமாகவும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க முடியாது என சீனாவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வட கொரியாவின் ஒலிம்பிக் குழு, விளையாட்டு அமைச்சு எழுதிய கடிதம் விளையாட்டு வீரர்களை மாத்திரம் குறிப்பிட்டதா இராஜதந்திரப் பிரதிநிதிகளையும் குறிப்பிட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

அமெரிக்கா, அவுஸ்ரேலியா, பிரித்தானியா, கனடா உள்ளிட்ட நாடுகள் அண்மையில் போட்டிகளுக்கு அதிகாரிகளை அனுப்பப்போவதில்லை என்று தெரிவித்தன.

சீனா, ஒலிம்பிக் போட்டிகளை வெற்றிகரமாகத் தொடங்குவதைத் தடுக்கவும் அனைத்துலக அளவில் சீனாவின் நன்மதிப்பைக் குறைக்கவும் அந்நாடுகள் முயல்வதாக வட கொரியா குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.