சிறிய எண்ணிக்கையிலான சுற்றுலாப்பயணிகளிற்கு அனுமதியளிப்பதன் மூலம் இலங்கை ஜூன் மாத நடுப்பகுதியில் சுற்றுலாத்துறையை திறக்கவுள்ளது.
உலக நாடுகளை சேர்ந்த சிறிய எண்ணிக்கையிலானவர்களிற்கு இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்வதறகும் கடுமையான பாதுகாப்பு நடைமுறைகளை பேணிவரும் அரசாங்கத்தின் அனுமதி பெற்ற ஐந்துநட்சத்திர ஹோட்டல்களில் தங்குவதற்கும் அனுமதி வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுற்றுலாப்பயணிகள் தங்களிற்கு கொரோனா வைரஸ்தொற்றில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்களை வைத்திருக்கவேண்டும் என சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் ஹெட்டியராச்சி தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளிற்கு விமானநிலையத்தில் கொரோனா வைரஸ் சோதனை இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுற்றுலாப்பயணிகள் குழுவாகவே அனுமதிக்கப்படுவார்கள் தனிநபர்களிற்கு அனுமதியில்லை என அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.