செயற்குழுக் கூட்டத்தை Online முறையில் நடத்த திட்டம்

0

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்தினூடாக Online முறையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக சமூக இடைவௌி தொடர்பான ஒழுங்குமுறைகள் தொடர்ந்தும் பேணப்படுமாயின் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என பாராளுமன்றத்தின் தொலைத்தொடர்பு திணைக்களம் அறிக்கை வௌியிட்டுள்ளது.

இதனடிப்படையில், அதற்கான இயலுமை மற்றும் தொழில்நுட்ப குறைபாடுகளை கண்டறிவதற்காக நேற்றைய தினம் செயற்குழு மண்டபத்தில் ஒத்திகை இடம்பெற்றுள்ளது.

பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க மற்றும் பிரதி செயலாளர் நீல் இத்தவெல ஆகியோரின் பங்கேற்புடன் இந்த ஒத்திகை இடம்பெற்றது