டெல்டா பிளஸ் இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை – சந்திம ஜீவந்தர

0

கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாட்டின் புதிய வகையான டெல்டா பிளஸ் இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு சக்தி பிரிவின் தலைவர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமது ஆய்வுகூடத்தில் துரித ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதற்கமைய டெல்டா பிளஸ் மாறுபாடு இதுவரை நாட்டில் அடையாளம் காணப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் பெற்றுக்கொள்ளப்படும் மாதிரிகள் ஊடாக தொடர்ந்தும் பரிசோதனைகள் இடம்பெறுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.