கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்வது தொடர்பில் எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
ஐரோப்பிய நாடுகளில் அஸ்ட்ரா ஸெனெக்கா என்ற கொரோனா தடுப்பூசி பாவனை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசியை நாம் பெற்றுக்கொள்ளவில்லை. இதனால் தற்போது நாட்டில்பயன்படுத்தப்படும் தடுப்பூசி தொடர்பில் எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இது பாதுகாப்பானது என்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.
ஐரோப்பாவில் பயன்படுத்தப்படும் தடுப்பூசி இலங்கைக்கு தருவிக்கப்படவில்லை. இதனால், தடுப்பூசியை பெற்றுக் கொள்வது பற்றி எவரும் அச்சம் அடையத் தேவையில்லை என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.