தபால் மூல வாக்களிப்பு சுதந்திரமாக இடம்பெற்றது – ரோஹன ஹெட்டியாராச்சி

0

நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு சுதந்திரமாகவும் நியாயமானதாகவும் இடம்பெற்றுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த தேர்தலுடன் ஒப்பிடும் போது தேர்தல் வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகள் குறைந்த மட்டத்திலேயே காணப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.