இலங்கை மக்களுக்கு வழங்கவென தமிழ்நாடு அரசால் அனுப்பட்டுள்ள நிவாரணப் பொருட்கள் நாளை 18 ஆம் திகதி இலங்கை வந்தடையும்.
பால்மா உட்பட உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய 40 மில்லியன் பொதிகள் தமிழ்நாடு அரசால் இலங்கைக்கு வழங்கப்படுகிறது.
இந்த நிவாரணப் பொருட்களில் முதல் தொகுதியான ஒரு மில்லியன் நிவாரணப் பொதிகள் நாளை இலங்கை வந்தடையவுள்ளது.
உணவு விநியோகம் தொடர்பாக ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து ஆராய்வதற்கு பிரதமரால் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் தலைவர் வஜிர அபேவர்தன இத்தகவலை தெரிவித்துள்ளார்.
இந்த நிவாரணப் பொருட்கள் கிழக்கு மாகாணம், பதுளை மற்றும் ஏனைய பிரதேசங்களிலுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு விநியோகிக்கப்படும்.