தர்ஷனின் காதல் பிரிவு தொடர்பில் ஷெரின் வெளியிட்ட தகவல்

0

நடிகர் தர்ஷன் – நடிகை சனம் ஷெட்டி பிரிந்ததற்கு தான் காரணம் இல்லை என பிக்பாஸ் பிரபலம் ஷெரின் தெரிவித்துள்ளார்.

நடிகை ஷெரின் செல்வராகவன் இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது சக போட்டியாளரும் மாடலுமான தர்ஷனை ஒரு தலையாக காதலித்தார்.
தர்ஷனுக்கு ஏற்கனவே காதலி இருக்கிறார் என்று தெரிந்தும் அவரை ஒரு தலையாக காதலித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த தர்ஷன், தனது காதலியான சனம் ஷெட்டியுடன் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்.
இந்நிலையில் ஷெரின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பக்கத்திற்கு பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். தர்ஷன் மற்றும் சனம் ஷெட்டி இடையிலான காதல் முறிவை மறைமுகமாக குறிப்பிட்டே அவர் இந்த பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில் தெரிவித்திருப்பதாவது, கடந்த ஒரு மாதமாய் நிறைய பேசப்பட்டுவிட்டது, நிறைய செய்யப்பட்டுவிட்டது.
யாராவது என்னைத் தாக்க வேண்டும் என்றால் தாராளமாக செய்யுங்கள், அதற்கு நான் கையெழுத்து போட்டு தருகிறேன். நீங்கள் என்னை மோசமான பெயர்களால் அழைப்பதை நான் சிரிப்புடன் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இதில் இருந்து என் குடும்பத்தை விட்டுவிடுங்கள். போலி அக்கவுண்டுகளில் மறைந்து கொண்டு அவர்களை வசைபாடுவதையும் ட்ரோல் செய்வதையும் ஏற்க முடியாது.
குறுகிய மனப்பான்மை யாரோ செய்த தவறுக்காக என்னை பழி சொல்வது, எனக்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தாது. உங்களின் குறுகிய மனப்பான்மையும் குறுகிய பார்வையும் தான் வெளிப்படுகிறது. மற்றவர்கள் மீது முறையாக குறை சொல்ல கற்றுக் கொள்ளுங்கள். நான் அமைதியாக இருப்பதை என்னுடைய பலவீனமாக நினைக்க வேண்டாம். இந்த விவகாரத்தில் நான் இல்லாததால் எதுவும் பேசாமல் இருக்கிறேன்.
மக்கள் கோபமாக இருக்கிறார்கள். என்னுடைய கமென்ட் செஷனில் கொட்டித்தீர்ப்பது அவர்களுக்கு அமைதியை கொடுக்கும் என்றால் அவர்கள் செய்யட்டும். அது என்னையும் என்னுடைய கேர் வேல்யூஸையும் மாற்றாது. நான் ரொம்பவே அதிர்ஷ்டசாலி, உங்களை போன்றவர்கள் என்னிடம் சண்டை போடுவதற்கும் எனக்காக சண்டை போடுவதற்கும்.
இந்த விவகாரம் தொடர்பாக இதுதான் என்னுடைய அதிகாரப்பூர்வ தகவல் இதுதொடர்பான கேள்விகளுக்கும் ரியாக்‌ஷன்களுக்கும் இனிமேல் இதுபோன்று நான் பதில் சொல்ல மாட்டேன். இவ்வாறு ஷெரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.