திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் முன் ஆர்ப்பாட்டம்!

0

திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம் இன்று பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர், நலன் விரும்பிகளால் முன்னெடுக்கப்பட்டது.

2017 ஆம் ஆண்டும் இதே போன்றதொரு ஆர்பாட்டம் இடம்பெற்றது. ஆசிரியர்கள் சிலர் பாடசாலை காலச்சாரதிற்கு ஒவ்வாத வகையில் ஆடை அணிந்து வந்தமையால், பாடசாலை சமூகத்தினால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

குறித்த பாடசாலையின் பண்பாட்டுக்கும் பாடசாலையின் கலாச்சார மரபிற்கும் உரிய ஆடைகளை அணிந்து வருமாறு நிர்வாகத்தினரால் கோரபட்டு, இருந்த போதிலும் சில ஆசிரியர்கள் தொடர்ச்சியாக முரண்பாட்டை ஏற்படுத்தி வருகின்றனர்.

இருப்பினும் 5 ஆசிரியர்கள் அதனை கருத்தில் கொள்ளாது “ஹபாயா” அணிந்து வந்தனர். இதன் காரணமாகவே 2017 ஆண்டு ஆர்பாட்டம் இடம்பெற்றது.

அதன் பின்னர் இரண்டு தரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைகள், தொடர்ச்சியான விசாரணைகள் இடம்பெற்றுக்கொண்டிந்த காலப்பகுதியில் 5 ஆசிரியர்களும் கல்வி திணைக்களத்தினால் வேறு பாடசாலைகளுக்கு பணிக்கு அமர்த்தபட்டனர்.

குறித்த காலப்பகுதியில் நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்றுசூழ்நிலை காரணமாக விசாரணைகள் தாமதமாகிகொண்டிருந்தமையால் 5 ஆசிரியர்களில் 2 பேர் வேறு பாடசாலைகளுக்கு நிரந்தரமாக இடமாற்றம் பெற்று சென்றனர்.

இருப்பினும் மீதமுள்ள மூவரும் மீண்டும் இன்றைய தினம் () பாடசாலை நிர்வாகம் ஏற்காத உடை (ஹபாயா) அணிந்து வந்தமையால் பதற்றநிலை ஏற்பட்டது.

இவ்வேளையில் குறித்த மூன்று ஆசிரியர்களுடனும் வருகைதந்த ஒரு சில இனம்தெரியாத நபர்களால் சண்முகா இந்துகல்லூரியின் அதிர்பர் தாக்கப்பட்டார். இதன் காரணமாக மயக்கம் அடைந்து, அருகில் இருந்த ஆசிரியர்கள் உடனே அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்றனர்.தற்போது அதிபர் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

இதேவேளை குறித்த ஆசிரியர்களில் ஒருவர் தன்னை பாடசாலை நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் கழுத்தை நெரித்ததாகவும், மிரட்டியதாகவும் பொய் குற்றச்சாட்டை கூறி அவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.

இதனால் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்பட்டு இருப்பதுடன், பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றது.