தேசிய கல்வியல் டிப்ளோமாதாரர்களுக்கு ஆசிரியர் நியமனம்

0

2017/19 ஆம் கல்வியாண்டிற்கான தேசிய கல்வியல் டிப்ளோமாதாரர்களுக்கு அடுத்த மாதம் 4 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஆசிரியர் நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலைகளில் நியமனம் வழங்கப்படவுள்ள ஆசிரியர் பயிலுனர்களின் பெயர்ப்பட்டியல் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கல்வி அமைச்சின் www.moe.gov.lk என்ற இணையத்தளத்தில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தேசிய பாடசாலைகளில் நியமனம் பெற்றவர்களின் நியமனக் கடிதங்கள் உரிய பாடசாலை அதிபர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் 4 ஆம் திகதி குறித்த பாடசாலை அதிபர்களை சந்தித்து நியமனக் கடிதங்களை பெற்றுக்கொள்ளுமாறும் கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.