தைப்பொங்கல் கொண்டாட்டங்களை வீடுகளில் மட்டுப்படுத்திக்கொள்ளுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், சமூகத்துடன் இணைந்து கொண்டாட்டங்களில் ஈடுபடுவதை தவிர்க்குமாறும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலையடுத்து இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சுகாதார வழிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் எனவும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.