கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பொது தேர்தலை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இந்த தகவலை வெளியிட்டார்.
பொதுத் தேர்தலை ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடத்த முடியாதெனவும் தேர்தல் தினம் குறித்து மார்ச் 26 இல் முடிவு செய்யப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மேலும் தெரிவித்தார்.
இன்றுடன் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் காலம் நிறைவைடைந்துள்ள நிலையிலேயே எதிர்வரும் பொதுத் தேர்தலை தற்போது நடத்துவற்கு வாய்ப்புகள் இல்லையென அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் மக்களின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டு இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.