நாடு முடக்கப்படுகின்றதா? இறுதி தீர்மானம் இன்று!

0

இலங்கையில் புதிதாக உருவாகியிருக்கும் கொரோனா அபாய நிலைமையையடுத்து, நாடளாவிய ரீதியிலோ அல்லது சில பகுதிகளையோ மூடுவது குறித்து இன்று இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ தலைமையில் இன்று விசேட கலந்துரையாடல் நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலந்துரையாடலில் வைத்திய நிபுணர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்வார்கள்.

தற்போதைய சூழ்நிலையில் நாடு மூடப்படாவிட்டால் நிலைமை மோசமடையக்கூடும் என்று நிபுணர்கள் ஏற்கனவே எச்சரித்துள்ளனர்.

அதன்படி, எழுப்பப்பட்ட பிரச்சினைகள் குறித்து விவாதித்து ஜனாதிபதி இன்று இறுதி முடிவு எடுக்க உள்ளார்.