Breaking news – 25ஆம் திகதி ஆரம்ப பாடசாலைகள் மீள ஆரம்பம்

0

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகளின் ஆரம்ப பிரிவு வகுப்புகளையும், மீள திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 25ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஆரம்பப் பிரவு வகுப்புகளுக்கான கற்பித்தல் செயற்பாடுகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பெரேரா கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக சுமார் 06 மாதங்கள் பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன.

ஏனைய வகுப்புகளை ஆரம்பிப்பது தொடர்பான திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் அதேவேளை, கொரோனா பரவலுக்கு மத்தியில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு சகல தரப்பினரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.