அனைத்து சுகாதார பணியாளர்களுக்கும் கோவிட் தடுப்பூசியின் 3ஆவது அலகு வழங்கப்படவேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எழுத்து மூலமான கோரிக்கையை விடுத்துள்ளது.
சங்கத்தின் ஊடகப் பேச்சாளர், மருத்துவர் சமந்த ஆனந்த இதனைத் தெரிவித்தார்.
மேலும், “நாட்டைத் திறக்க வேண்டுமாயின் நாட்டில் சுகாதாரத் துறை வலுப்படுத்தப்பட வேண்டும். நாட்டில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, சுகாதாரப் பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
தடுப்பூசி திட்டம் சர்வதேசத்திடம் பாராட்டை பெற்றாலும், தடுப்பூசி திட்டம் தொடர்ந்து வெற்றிபெற வேண்டுமானால் சுகாதாரத் துறை வலுப்படுத்தப்பட வேண்டும்.
மேலும் பைசர் தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் முழு அதிகாரங்களை இராணுவத்திற்கு வழங்குவதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது” எனவும் தெரிவித்தார்.