நாளைய தினமும் சமையல் எரிவாயு விநியோகம் முன்னெடுக்கப்பட்ட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
3,900 மெற்றிக் டன் எரிவாயுடன் நேற்று நாட்டை வந்தடைந்த கப்பலுக்கு செலுத்தவேண்டிய 2.5 மில்லியன் டொலர் பணம் செலுத்தப்படாமையால், இதுவரையில் எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் முன்னெடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்காரணமாக, இன்றைய தினமும் எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்கப்படவில்லை.
சந்தையில், எரிவாயு இல்லாத நிலையில், நாட்டின் பல பாகங்களில், இன்றைய தினமும் எரிவாயுக் கொள்வனவு செய்வதற்காக, எரிவாயு விற்பனை நிலையங்களுக்கு முன்னால் பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
இதன்போது, சில பகுதிகளில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையால் அமைதியின்மை ஏற்பட்டதாகவும் எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.