நிதி முறைகேடுகள் குறித்து ஆராய ஆணைக்குழு

0

கடந்த நல்லாட்சிக் காலத்தில் அரசு வங்கிகள் வழங்கிய அவசியமற்ற கடன்கள் மற்றும் நிதி முறைகேடுகள் குறித்து ஆராய ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கை வங்கியின் ஊழியர் சங்கத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து இந்த ஆணைக் குழு ஸ்தாபிக்கப்படும் என பிரதமர் கூறினார்.

இலங்கை வங்கியின் ஊழியர் சங்கத்தினருக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று (26) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இதன்போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

அரசு வங்கிகளில் தற்போது பணியாற்றும் ஊழியர்களின் ஓய்வூதியம் குறித்தும் பிரதமர் இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தினார்.

இந்த விடயம் குறித்து ஆராய குழுவொன்றை அமைத்து அதனூடாக விரைவில் தீர்வு ஒன்றை பெற்றுக்கொள்ள பிரதமர் தீர்மானித்தாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.