மனிதர்களின் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கும் மற்றுமொரு கோவிட்-19 வைரசின் திரிபு பிரித்தானியாவில் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
B.1.525 என்ற இந்த புதிய வைரஸ் திரிபின் தொற்றுக்கு உள்ளான 33 பேர் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென் ஆபிரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளில் கண்டறியப்பட்ட இரண்டு திரிபுகளில் காணக்கூடிய E484K என்ற மரபணு திரிபு பிரித்தானியாவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வைரஸ் திரிபில் காணப்படுவதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இந்த வைரஸ் திரிபு 70 வீதம் வரை பரவக் கூடியது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
B.1.525 என்ற இந்த கோவிட்-19 வைரஸின் புதிய திரிபு பிரித்தானியாவில் கடந்த டிசம்பர் மாதம் நடுப்பகுதியில் கண்டறியப்பட்டது.
தற்போது கண்டறியப்பட்டுள்ள வைரஸ் திரிபு அதில் பரிமாணமடைந்தது எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.