நோர்வே தூதுவரை சந்தித்து பேசினர் கூட்டமைப்பினர்!

0

நோர்வேயின் இலங்கைக்கான தூதுவர் Trine Jøranli Eskedal மற்றும் துணைத் தூதுவர் ஹில்டே பேர்க் ஹான்சன் ஆகியோரை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சிலர் சந்தித்து பேசியுள்ளனர்.

நேற்று(புதன்கிழமை) குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் மற்றும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் குருசாமி ஆகியோர் குறித்த சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.

இதன்போது தற்போதுள்ள அரசியல் சூழ்நிலைகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் மக்களின் அரசியல் உரிமை சார்ந்து தொடர்ந்து உறுதியான ஆதரவு நிலைப்பாட்டிலுள்ள நாடான நோர்வேயுடன் தமிழ் தரப்பின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இச்சந்திப்பு ஒரு மணி நேரம் நடைபெற்றதாகவும் குறிப்பிடப்படுகின்றது.