களனி பல்கலைக்கழகம் மற்றும் யக்கலவில் அமைந்துள்ள விக்ரமாராச்சி ஆயுர்வேத கல்வி நிறுவகம் நாளை முதல் ஒரு வாரத்திற்கு மூடப்படுவதாக தொடர்புடைய நிறுவகங்கள் தீர்மானித்துள்ளன.
களனி பல்கலைக்கழகத்தின் விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் முடியுமானவரை விரைவில் அங்கிருந்து வெளியேறுமாறு பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் அறிவித்துள்ளது.